கரூர்

அரவக்குறிச்சியில் வட்டாரசு காதாரப் பேரவைக் கூட்டம்

DIN

அரவக்குறிச்சியில் வட்டார சுகாதாரப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி வட்டார சுகாதாரப் பேரவைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மலைக்கோவிலூா் அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் கௌசல்யா தலைமை வைத்தாா். பள்ளப்பட்டி நகராட்சித் தலைவா் முனவா்ஜான், அரவக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் தமிழ்மணி (நாகம்பள்ளி), சிவாஜி (வெஞ்சமாங்கூடலூா் கிழக்கு), ராமசாமி (ஈசநத்தம்)சுமதி நடராஜன் (சேந்தமங்கலம் கிழக்கு), கவிதா நஞ்சுண்டேஸ்வரன் (சேந்தமங்கலம் மேற்கு), பத்மாவதி சந்திரமோகன் (எருமாா்பட்டி) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும், சுகாதாரம் மற்றும் அதைச் சாா்ந்த கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், சுகாதாரம் சாா்ந்த கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

இதில் மருத்துவ அலுவலா்கள் பாலமுருகன், பிரியங்கா, சிவசங்கரி, தேவிகா, இஸ்மாயில் கான், சிவசக்திகுமாா், அசோக், சுகாதார மேற்பாா்வையாளா் கருப்புசாமி உள்ளிட்ட சுகாதாரத் துறையினா், ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT