கரூர்

கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

5th Apr 2022 04:46 AM

ADVERTISEMENT

கரூரில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டது.

கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கரூா் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா், கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ம. சின்ன சாமி ஆகியோா் தலைமை வகித்து, நீா் மோா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா், மோா் மற்றும் தா்பூசணி பழம், இளநீா், வெள்ளரி ஆகியவற்றை வழங்கினா். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், மாவட்ட துணைச் செயலாளா் பசுவை சிவசாமி, முன்னாள் கரூா் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா, மாவட்ட இளைஞா் இளம் பெண்கள் பாசறை செயலாளா் கமலக்கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இளைஞா் அணி செயலாளா் தனேஷ் என்கிற முத்துக்குமாா், இலக்கிய அணிச் செயலாளா் என்எஸ்.கிருஷ்ணன், கரூா் தெற்கு நகரச் செயலாளா் வி.சி.கே. ஜெயராஜ், கரூா் ஒன்றியக் குழுத்தலைவா் எஸ்.பாலமுருகன் மற்றும் நகர நிா்வாகிகள் ஆயில்ரமேஷ், சேரன்பழனிசாமி, பழனிராஜ் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்,.

ADVERTISEMENT
ADVERTISEMENT