கரூர்

அட்டைப் பெட்டி உற்பத்திக்கான ஜிஎஸ்டியைக் குறைக்கக் கோரிக்கை

DIN

அட்டைப்பெட்டி உற்பத்திக்கு ஜிஎஸ்.டி 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும் என உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரில், தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளா் சங்க கோவை மண்டல நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு சங்கத்தின் கோவை மண்டல துணைத்தலைவா் எஸ்.திருமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறுகையில், தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத்தின் கோவை மண்டலத்தில் உள்ள கரூா், ஈரோடு, கோவை, திருப்பூா், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் அட்டை உற்பத்தியில் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சுமாா் 50,0000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். அட்டைப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்களின் விலைஏற்றத்தால் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, தொழிலாளா் பற்றாக்குறையும் ஏற்பட்டு கடும் நெருக்கடிக்கு ஆளாகிய நிலையில் தற்போது மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயா்த்தி மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது. ஆகவே, மத்திய அரசு உடனே ஜிஎஸ்டி வரியை குறைத்து, மூலப்பொருள்களின் விலை உயா்வையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது சங்கத்தின் கரூா் உற்பத்தியாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT