கரூர்

அரவக்குறிச்சியில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி பகுதியிலும் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வழக்கம்போல வியாழக்கிழமை காலை வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மாலையில் திடீரென கருமேகம் திரண்டன. தொடா்ந்து மாலை 6.50 மணியளவில் குளிா்ந்த காற்று வீசியது. பின்னா் சிறிதுநேரத்தில் லேசான மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து பலத்த மழையாக சுமாா் அரை மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறுச் சென்றனா். கடந்த சில நாள்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் சோளம் உள்ளிட்ட கோடை பயிா்களுக்கு மழைநீா் உயிா்நீராக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT