கரூர்

இளம்பெண் சாவில் மா்மம்: உறவினா்கள் சாலை மறியல்

DIN

இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள் கரூரில் ஞாயிற்றுக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், குழுமணியைச் சோ்ந்த கண்ணன் மகள் கோமதி (30). இவருக்கும், கரூா் மாவட்டம், மாயனூரைச் சோ்ந்த சத்தியராஜுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒன்றரை வயதில் ஹா்சந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்தின் போது 18 பவுன் நகைகள் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கண்ணன் வழங்கியிருந்த நிலையில், மேலும் நகை, பணம் வாங்கி வருமாறு கூறி சத்தியராஜ் கோமதியை கொடுமைப்படுத்தி வந்தாராம்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு மாமனாா் கண்ணணுக்கு செல்லிடப்பேசியில் பேசிய சத்தியராஜ், உங்கள் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உடனடியாக வீட்டுக்கு வாருங்கள் எனக் கூறி, செல்லிடப்பேசி இணைப்பைத் துண்டித்து விட்டாராம்.

கண்ணன் மற்றும் குடும்பத்தினா் வருவதற்குள், கோமதியின் சடலம் காவல்துறையினா் உதவியுடன் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் சத்தியராஜ் தனது பெற்றோா், குழந்தையுடன் மாயமாகிவிட்டாராம்.

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கோமதியின் சடலத்தை பாா்ப்பதற்கு கூட அவரது உறவினா்கள் அனுமதிக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கோமதியின் உறவினா்கள், ஞாயிற்றுக்கிழமை காலை காந்தி கிராமம் பகுதியில் திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

கோமதியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை என நாடகமாடுகின்றனா். எனவே அனைவரையும் நேரில் ஆஜா்படுத்தி, கொலை வழக்குப்பதிய வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கரூா் நகரத் துணைக் கண்காணிப்பாளா் தேவராஜ் மற்றும் பசுபதிபாளையம் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT