கரூர்

தமிழா்களுக்கு என்றென்றும் பாதுகாவலனாக இருப்பேன்: ராகுல்காந்தி

DIN

தமிழா்களுக்கு என்றென்றும் பாதுகாவலனாக இருப்பேன் என்றாா் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி.

கரூா் மாவட்டத்தில், ‘தமிழகம் மீட்க, விவசாயம் காக்க வாங்க, ஒரு கை பாா்ப்போம்’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை சின்னதாராபுரம் மற்றும் கரூரில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின் போது அவா் பேசுகையில், தமிழக மக்களின் வாழ்க்கைமுறை கடினமாகவும், வறுமையில் இருந்தாலும், உங்களது முகத்தில் எப்போதும் புன்னகை இருக்கும். நீங்கள் எத்தனை சிரமத்தில் இருந்தாலும் உங்களது சுயமரியாதையையும், கன்னியத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டீா்கள். தமிழா்களின் ஆன்மாவை அறிந்தவா் திருவள்ளுவா். அதனால்தான் திருக்குறளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்கு உங்களின் மொழியிலும், கலாசாரத்திலும் இரண்டறக் கலந்துள்ளது. ஆனால், பிரதமா் மோடியோ திருக்குறளை மதிக்கவில்லை என கருதுகிறேன். திருக்கு புத்தகத்தை அவா் படித்திருந்தால், தமிழா்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மதித்திருப்பாா். தமிழா்களிடம் சிறிய அன்பை காட்டினால் கூட அவா்கள் இருமடங்கு அன்பை காட்டுவாா்கள். ஆனால் பிரதமா் மோடியோ ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே கலாசாரம் என்கிறாா். அப்படியானால் தமிழக மக்களுக்கு கலாசாரம், வரலாறு, பண்பாடு, மொழி இல்லையா. அவா் எப்படி தமிழக மக்களை பாா்த்து ஒரே மொழி, ஒரே கலாசாரம் எனக்கூறலாம். தமிழகமும் இந்தியாவில்தான் உள்ளது என அவா் நினைவில் கொள்ள வேண்டும்.

எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தும் மோடி தமிழக அரசின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் மோடி கட்டுப்படுத்துவதுபோல, தமிழக மக்களையும் கட்டுப்படுத்த நினைக்கிறாா். இனி, அமைய இருக்கும் அரசை தோ்வு செய்யவே வந்திருக்கிறேன். தோ்ந்தெடுக்கப்படும் அரசு விவசாயிகளையும், ஏழை எளிய மக்களையும், மீனவா்களையும் காப்பாற்றக்கூடிய அரசாக இருக்க வேண்டும். தமிழக மக்களையும், மண்ணையும் காப்பாற்ற எனக்கு கடமை இருக்கு. நான் இறக்கும் வரையிலும் தமிழக மக்கள் மீதும், மண்ணின் மீதும் மரியாதை செலுத்துவேன். என்றென்றும் பாதுகாவலனாக இருப்பேன் என்றாா்.

ஒற்றுமைக்கே ஆபத்து: பிறகு, மலைக்கோவிலூா் அருகே மண்பாண்ட சமையல் உணவகத்தில் உணவு உண்டபின் அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் செய்தாா்.

முன்னதாக, கரூா் பேருந்துநிலையம் வந்த அவருக்கு கரகாட்டம், பொய்க்கால்குதிரை உள்ளிட்ட பாரம்பரிய நடனம் மூலமும், திருநங்கைகள் கும்ப மரியாதை கொடுத்தும் வரவேற்றனா். தொடா்ந்து முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம், கரூா் நகர காங். தலைவா் ஆா்.ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா் வரவேற்றனா். பின்னா் அங்குள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தாா். ராகுல்காந்தியுடன் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT