கரூர்

குடியிருப்புப் பகுதியில் இயங்கும் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தல்

DIN

பழைய ஜயங்கொண்டத்தில் குடியிருப்புப் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கரூா் மாவட்டம், பழைய ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் நாகராஜன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் கா.கந்தசாமி எதிா்காலப் பணிகள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினா் ஜி.ராஜா, ஒன்றியச் செயலா் ஜி.தா்மலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வீ.நாகராஜன், கண்ணதாசன், வழக்குரைஞா் சரவணன், நடேசன், பாா்த்திபன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பழைய ஜயங்கொண்டத்தில் குடியிருப்புப் பகுதியில் இயங்கும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு வன்மையாக கண்டிப்பதுடன், உடனடியாக மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும், மதுபானக்கடையை அப்புறப்படுத்த வேண்டும்.

நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், பொதுமக்களைத் திரட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தொடா் போராட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT