கரூர்

ஈசநத்தத்தில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்

DIN

ஈசநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். இளங்கோ தொடக்கி வைத்தாா். முகாமில் ரத்தத்தில் சா்க்கரை அளவு, ஹீமோகுளோபின், கொழுப்புச் சத்து அளவு கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்டன.

முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் கெளசல்யா தலைமை வகித்தாா். ஈசநத்தம் ஊராட்சித் தலைவா் ராமசாமி முன்னிலை வகித்தாா்.

மருத்துவா்கள் கோகிலா, காா்த்திகேயன், ஜோனா, பாலமுருகன், ராஜவா்ஷினி, பிரியங்கா, தேவசேனா, சிவசங்கரி உள்ளிட்ட மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தனா்.

யுனானி மருத்துவா் இஸ்மாயில்கான் முகாமில் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினாா். கண்கள் மற்றும் பிறவி குறைபாடு உள்ளவா்களுக்குப் பரிசோதனை செய்து, அறுவைச்சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனா்.

முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் (பொ) கருப்புச்சாமி, சுகாதார ஆய்வாளா் குழந்தைவேல் உளளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT