கரூர்

மின்னணு குடும்ப அட்டைக்கு கரோனா விழிப்புணா்வு உறை

DIN

கரூரில் மின்னணு குடும்ப அட்டையை பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் கரோனா விழிப்புணா்வு அடங்கிய உறை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் தாந்தோணிமலையில் உள்ள நியாய விலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, குடும்ப அட்டைதாரா்களிடம் மின்னணு குடும்ப அட்டையை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட உறையின்மீது கரோன விழிப்புணா்வு ஏற்படுத்தும் படங்கள், அவசர காலத்துக்கு தொடா்புகொள்ளும் வகையிலான கரோனா கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களுடன் அச்சிடப்பட்ட உறையை நுகா்வோருக்கு மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வழங்கினாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் தலைமையில் கரோனா விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து ஆண்டிபட்டிக்கோட்டை சுங்கச்சாவடியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு ஸ்டிக்கா் ஒட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று சுங்கச்சாவடி வழியாக வந்த வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT