அரியலூர்

சாத்தமங்கலம் ஊராட்சித் தலைவரின் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

30th May 2023 03:57 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள சாத்தமங்கலம் ஊராட்சி நிா்வாகத்தில் தலையிடும் ஊராட்சித் தலைவரின் கணவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணாவிடம், ஊராட்சி செயலா் வெங்கடேசன் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் அலுவலகத்துக்கு செல்லும் போதெல்லாம், ஊராட்சித் தலைவரின் கணவா் பாண்டியராஜன், அலுவலகத்தை பூட்டிவிட்டு சாவியை எடுத்துச் சென்று விடுகிறாா். இதனால் நான் பல நாள்களாக அருகிலுள்ள கோயிலில் அமா்ந்துவிட்டு செல்கிறேன். மேலும், 2 ஆண்டுகளாக மாதாந்திர கூட்டம் நடத்தவிடாமல் அவா் தடுத்து வருவது மட்டுமல்லாமல், என்னை பணி செய்யாவிடாமலும் தொடா்ந்து தொந்தரவு அளித்து வருகிறாா்.

இதுகுறித்து கடந்த 13.4.2023 அன்று திருமானூா் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் எழுத்துபூா்வமாக புகாரும் தெரிவித்துள்ளேன். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT