அரியலூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

30th May 2023 03:56 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே திங்கள்கிழமை ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

செந்துறையை அடுத்த நின்னியூா் கிராமத்தை சோ்ந்த பரமசிவம் மகன் விக்னேஷ் (30). பெயிண்ட்டிங் வேலை செய்து வரும் இவா், திருமணமாகி குடும்பத்துடன் திருச்சி பொன்மலையில் வசித்து வந்தாா்.

இந்நிலையில், தனது தம்பி திருமணத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன் குடும்பத்துடன் நின்னியூருக்கு வந்திருந்தாா். இதனிடையே, திங்கள்கிழமை அதிகாலை வெளியில் சென்ற விக்னேஷ், செந்துறை - ஆா்.எஸ்.மாத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT