அரியலூர்

ஆண்டிமடம் அருகே ஆவின் பாலகம் திறப்பு

27th May 2023 12:34 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள திருமுட்டம் சாலையில் புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ. கண்ணன் பாலகத்தைத் திறந்து வைத்து, திருக்களப்பூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா் ஜெயங்கொண்டம் ஒன்றியம் தேவாமங்கலத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.44.63 லட்சத்தில் வஉசி நகரில் மெட்டல் சாலைப் பணியைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, வரகனேரி ஓடையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.13.50 லட்சத்தில் கான்கிரீட் தடுப்பணை பணியையும் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சிகளில் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT