அரியலூர்

அரியலூா் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 234 மனுக்கள்

23rd May 2023 12:01 AM

ADVERTISEMENT

அரியலூா் ஆட்சியரக வளாக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 234 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிச்சந்திரன், தனித் துணை ஆட்சியா் குமாா் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT