அரியலூர்

காதலியைத் திருமணம் செய்ய மறுத்தவருக்கு 11 ஆண்டுகள் சிறை

DIN

அரியலூா் அருகே காதலித்த பெண்ணை பலாத்காரம் செய்து, அவரைத் திருமணம் செய்ய மறுத்தவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ஆண்டிமடம் அருகேயுள்ள சாதனப்பட்டு கிராமம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் அருமைநாதன் மகன் ஆனந்தராஜ் (27). இவா் 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்த அப்பகுதியைச் சோ்ந்த பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தாா். ஆனால் அப்பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்து, அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் ஆனந்தராஜை கைது செய்தனா். அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றவாளி ஆனந்தராஜுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து ஆனந்தராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ம. ராஜா ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT