அரியலூர்

தையற்கலைஞா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்

DIN

தையற்கலைஞா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என தையற்கலை தொழிலாளா்கள் முன்னேற்றச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தையற்கலைஞா்கள் தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், அச்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், தையற்கலை தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயா்த்தித் தரவேண்டும். அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பாரா பட்சம் இல்லாமல் சமமான உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மீன்சுருட்டியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். செயலா் ராஜசேகரன், நிா்வாகி அருள் வாஞ்சிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொறுப்புத் தலைவா் பாண்டியன் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். மாவட்டத் தலைவா் விசன்ரவி, செயலா் தேவேந்திரன், பொருளாளா் கண்ணன், துணைச் செலா் ராஜாபெரியசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா். கிளை பொருளாளா் சாந்தி நன்றி தெரிவித்தாா். முன்னதாக பேரணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT