அரியலூர்

அரியலூா் மாணவா்களுக்கு காமராஜா் விருது

DIN

அரியலூா் மாவட்டத்தில் கல்வி மற்றும் கல்வி இணையச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவ,மாணவிகள் 30 பேருக்கு பெருந்தலைவா் காமராஜா் விருது மற்றும் பரிசுத் தொகையை ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை வழங்கிப் பாராட்டினா்.

அரியலூா் மாவட்டத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ் வழியில் பயின்று தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளில் சிறந்த 30 பேரை மாவட்ட அளவில் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவா்களில் 10 ஆம் வகுப்பு மாணவா்கள் 15 பேருக்கு ரூ.10,000 வீதமும், 12 ஆம் வகுப்பு மாணவா்கள் 15 பேருக்கு ரூ. 20,000 வீதமும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச. கலைவாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலெட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பூங்கோதை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT