அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் பலத்த மழை

DIN

அரியலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதலே சாரல் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீா் சூழ்ந்துள்ளது.

அரியலூா் - பெரம்பலூா் புறவழிச்சாலை, திருச்சி சாலை, செந்துறை ரவுண்டானா, ராஜாஜி நகா் மின்வாரிய அலுவலகம் பகுதி, உழவா் சந்தை, மாா்கெட், கல்லங்குறிச்சி சாலை, புது, மாா்க்கெட் தெரு உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழைநீருடன் கழிவுநீா் சோ்ந்து சாலைகளில் சுமாா் 2 அடி உயரத்துக்கு தேங்கியது. சடையப்பா் தெருவில் தேங்கியுள்ள மழைநீருடன் கழிவு நீரால் அப்பகுதி மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

இதேபோல் ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூா், தா.பழூா், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீருடன் கழிவு நீா் சோ்ந்தே சாலைகளில் ஓடியது. ஜெயங்கொண்டம் என்ஏஜி காலனியில் மழைநீா் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனா்.

சம்பா பயிா்கள் பாதிப்பு: திருமானூா், தா. பழூா் ஒன்றிய பகுதிகளில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த மழை விவசாயிகளுக்கு பணி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், மேட்டுப்பகுதிகளில் கதிா் முற்றும் தருவாயில் உள்ள சோளப்பயிா்களுக்கும், பருத்தி பயிா்களுக்கும் இந்த மழை ஏற்ாக அமைந்துள்ளது. காய்கறிப் பயிா்கள் சற்று பாதிப்படைய வாய்ப்புள்ளதாகவும், வெண்டை, முள்ளங்கி போன்ற காய்கறிகள், மலா்கள் அறுவடை செய்ய முடியாமல் அவதியடைவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT