அரியலூர்

கங்கைகொண்ட சோழபுரம் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி தொடக்கி வைப்பு

DIN

பேராசிரியா் க. அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

வேலூா் மாவட்டம், காட்பாடியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து காணொலிக் காட்சி மூலம் பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணியைத் தொடக்கி வைத்தாா். இதையடுத்து, கங்கைகொண்ட சோழபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அரியலூா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து அடிக்கல் நாட்டினா்.

நிகழ்ச்சியில், செயற்பொறியாளா் பிரபாகரன், முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ச.பரிமளம், ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் துரை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகானந்தம், அமிா்தலிங்கம், ஜெயங்கொண்டம் ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.என்.ரவிசங்கா், ஊராட்சி மன்றத் தலைவா் சரஸ்வதி முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT