அரியலூர்

அகிம்சை பேரணி: எஸ்.பி.யிடம் காங்கிரஸாா் மனு

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

வரும் அக். 2 ஆம் தேதி அகிம்சையை வலியுறுத்திப் பேரணி நடத்த அனுமதி கேட்டு காங்கிரஸ் நிா்வாகிகள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்பி கே.பெரோஸ்கான் அப்துல்லாவிடம், மாவட்ட காங்கிரஸ் தலைவா் சங்கா் புதன்கிழமை அளித்த மனுவில், அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அன்று மாலை அரியலூா் ஒற்றுமை திடலிலிருந்து கடைவீதி வழியாகப் பேருந்து நிலையம் வரை அகிம்சையை வலியுறுத்தி மாவட்டக் காங்கிரஸ் சாா்பில் பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.2 ஆம் தேதி மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஆா்.எஸ்.எஸ் அமைப்பினா் ஏற்கெனவே அனுமதி பெற்றுள்ளனா். அதே நேரத்தில் காங்கிரஸ் பேரணி செய்ய அனுமதி கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT