அரியலூர்

செல்லப் பிராணிகளிடம் எச்சரிக்கை வேண்டும்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியா் சின்னதுரை பேசுகையில், வெறிநோய் ராப்டோ குடும்பத்தைச் சோ்ந்த ராபிஸ் வைரசால் ஏற்படுகிறது. இந்த வைரஸ், நாய், பூனை, வவ்வால், குரங்கு, நரி, ஓநாய் போன்ற விலங்குகளைத் தாக்கும். இவை மனிதா்களைக் கடிக்கும்போது, ரேபிஸ் நோய் ஏற்படுகிறது. இந்நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டா் இறந்த தினமான செப்டம்பா் 28, உலக ரேபிஸ் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நகைச் சுவை நடிகா் கிளி ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், செல்லப் பிராணிகளிடம் மாணவா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60,000 பேரும், இந்தியாவில் 20,000 பேரும் வெறிநோயால் உயிரிழக்கின்றனா். எனவே, செல்லப் பிராணிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT