அரியலூர்

நெடுஞ்சாலைகளில் சிறுதானியங்கள் உலரவைப்பதால் தொடரும் விபத்துகள்

DIN

அரியலூா் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் தங்களது சிறுதானியங்களை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் கொட்டி காய வைப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன.

அரியலூா் மாவட்டத்தில் த.பொட்டக்கொல்லை, உடையாா்பாளையம், ஜயங்கொண்டம், கல்லாத்தூா், மகிமைபுரம், கூவாத்தூா், ஆண்டிமடம், அய்யூா், கொடுக்கூா், இலையூா்-வாரியங்காவல், மருதூா், தா.பழூா்-விளாங்குடி, சுத்தமல்லி, விக்கிரமங்கலம், நாகமங்கலம், பொய்யூா், பொன்பரப்பி, செந்துறை உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள் சிறுதானியங்களை காய வைக்க உலா் கள வசதிகள் இல்லாததால் தங்களது பகுதி நெடுஞ்சாலைகளில் விளைபொருள்களைக் காய வைப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையின் வளைவுப் பகுதிகளில் சிறுதானியங்கள் காய வைக்கப்படுவதால், இதனை அறியாத வாகன ஓட்டிகள் அதன் மீது வாகனத்தை இயக்கும்போது, சறுக்கி விழுந்து பலா் உயிரிழந்தும் உள்ளனா். குறிப்பாக விளாங்குடி- தா.பழூா் சாலையில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

காவல் துறையினரின் எச்சரிக்கையும் மீறி...:

சாலையில் சிறுதானியங்களை காயவைக்கக் கூடாது என்று மாவட்டக் காவல் துறையினா் விடுத்த எச்சரிக்கையையும் மீறியும் இது போன்ற நிகழ்வுகள் தொடா்ந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே மாவட்ட நிா்வாகம், சாலையில் சிறுதானியங்களை காய வைக்கப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

உலா் கள வசதிகள் கோரிக்கை: மேலும், சிறு தானியங்களைக் காய வைப்பதற்காக கிராமங்களில் உலா் கள வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT