அரியலூர்

சோப்பு வாங்கினால் பரிசுப் பொருள் எனக் கூறி மோசடி: 14 போ் கைது

DIN

அரியலூா் மாவட்டத்தில் சோப்பு வாங்கினால் பரிசு கிடைக்கும் எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட 14 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

கீழப்பழுவூரை அடுத்த பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ரோஸ்லின் என்பவரிடம் சோப்பு விற்பனை செய்து, டோக்கன் வழங்கிய சிலா் பல்வேறு பரிசுகள் கிடைக்கும் என்றும், அந்தப் பொருள்களை 50 சத தள்ளுபடி விலையில் தருவதாகவும் கூறினா். பின்னா், பரிசுப் பொருளுக்கான பாதிப் பணத்தை பெற்றுக் கொண்டு பொருள்களைத் தராமல் சென்றுள்ளனா். இதனால் சந்தேகமடைந்த ரோஸ்லின் கீழப்பழுவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில் வழக்குப் பதிந்த காவல் துறையினா் அப்பகுதியில் சோப்பு பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த உ. ரஞ்சித்குமாா் (31), க. விவேகானந்தன் (55), த. முப்பிடாதி (28), ஜெ. காளிமுத்து (35), க. சண்முகவேல் (37), ச. சின்னராமசாமி (65) மா. மாரியப்பன் (50), மா. ஜெயக்குமாா் (42), மு. விவேகானந்தம், வீ. சுரேஷ்குமாா்(43), மா. சின்னசுடலை(37), கு. குருநாதன்(30), பே. மாடசாமி (34), வே. இசக்கி முத்து(63) ஆகியோரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT