அரியலூர்

அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிராம மக்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தழுதாழைமேடு ஊராட்சிக்குட்பட்ட மெய்காவல் புத்தூா், காமராஜா் நகா் பகுதி மக்கள், இலவச வீட்டு மனைப் பட்டா, மயானத்துக்குப் பாதை, மின்சாரம், குடிநீா், தாா்ச் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கடந்த சில மாதங்களாக பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காமராஜா் நகா் பகுதி மக்கள், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட ஜயங்கொண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன், மீன்சுருட்டி காவல் துறையினா், கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தனா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலா் எம்.வெங்கடாசலம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மணிவேல், கே.மகாராஜன், டி. அம்பிகா, மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். மீனா உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT