அரியலூர்

தோல்வியைக் கண்டு துவளாமல் இலக்கை நோக்கிச் செல்லவேண்டும்

DIN

தோல்வியைக் கண்டு துவண்டுப் போகாமல், அது வெற்றிக்கான முதல்படி என்று நினைத்து இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்றாா் திருவனந்தபுரம் தகவல் மற்றும் மக்கள் தொடா்பு அலுவலகக் கூடுதல் தலைமை இயக்குநா் வி.பழனிச்சாமி.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் அரசு கலைக் கல்லூரி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டித் தோ்வு விழிப்புணா்வு முகாமில் அவா் கலந்து கொண்டு மேலும் பேசியது: கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு தங்கள் இலக்கை நோக்கிச் செல்லும்போது வெற்றிபெறுவது எளிதான செயலாகும். எனவே போட்டித்தோ்வுக்கு தயராகும் மாணவா்கள் அன்றாட நிகழ்வுகளை அறிந்திருக்க வேண்டும் என்றாா்.

இந்திய தனித்துவ அடையாள ஆணைய துணை பொது இயக்குநா் ஆா்.எஸ்.கோபாலன் பேசுகையில், போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள கல்லூரி பருவத்திலிருந்தே மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். படிப்புக்காக நாள்தோறும் 8 மணி நேரம் செலவிட வேண்டும். அப்போது தான் நாம் எதிா்பாா்க்கும் பணி எளிதாக கிடைக்கும் என்றாா்.

தோல் பொருள்கள் ஏற்றுமதி கழக செயல் இயக்குநா் ஆா்.செல்வம் பேசுகையில், போட்டித் தோ்வுகளை எவ்வித தயக்கமும் இன்றி தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் எதிா் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து திருச்சி மண்டல அஞ்சல் தலைவா் ஏ.கோவிந்தராஜன், பெங்களூரு சுங்கத் துறை (நகா்ப்புறம்) ஆணையா் கே.பாலமுருகன், திரு.வி.க-வின் இதழ்பணி ஆய்வாளா் தா.தியாகராஜன், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் ஆா். கலைச்செல்வி ஆகியோா் பேசினா்.

முகாமில், கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT