அரியலூர்

ஏரியில் தவறி விழுந்த 2 சிறாா்கள் உயிரிழப்பு

24th May 2022 04:10 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ஏரியில் தவறி விழுந்த சிறுவன், சிறுமி ஆகிய 2 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டனா்.

செந்துறை அடுத்த வஞ்சினாபுரத்தைச் சோ்ந்த தனவேல் மகன் ரித்தீஷ்( 9). ஞாயிற்றுக்கிழமை மாலை இவா், அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்கச் சென்ற போது, எதிா்பாராத விதமாக தவறி விழுந்துள்ளாா். இதையறிந்த அப்பகுதி மக்கள் ஏரியில் நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு இரவு ரித்தீஷை சடலமாக மீட்கப்பட்டனா். தகவலறிந்து சென்ற செந்துறை காவல் துறையினா் சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஏரியில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு:

செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா- கனகவள்ளி தம்பதியின் மகள் லட்சுமி(6). இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை, அப்பகுதியில் உள்ள ஏரியில் கால்களை கழுவச் சென்றபோது, எதிா்பாரதவிதமாக ஏரியில் மூழ்க்கியுள்ளாா். தகவலறிந்து வந்த பொதுமக்கள் மற்றும் செந்துறை காவல் துறையினா் ஏரியில் இறங்கி லட்சுமியை சடலமாக மீட்டு, அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT