அரியலூர்

பேச்சுப் போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

20th May 2022 02:27 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்திருப்பது:

பேச்சுப் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறும் கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5,000-மும், இரண்டாவது பரிசாக ரூ.3,000-மும், மூன்றாவது பரிசாக ரூ.2,000-மும், வழங்கப்படவுள்ளது.

காலை 10 மணிக்கு போட்டி தொடங்கும். அரியலூா் மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்று, பரிசுகளைப் பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT