அரியலூர்

விபத்தின்றி வாகனத்தை இயக்கிய ஓட்டுநருக்கு பாராட்டு

29th Mar 2022 03:20 AM

ADVERTISEMENT

அரியலூரில் நடைபெற்றுவரும் சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழாவில் விபத்தின்றி வாகனத்தை ஓட்டிய ஓட்டுநருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரியலூா் ஒற்றுமைத் திடலில், செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா புகைப்படக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியை பாா்வையிட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், கடந்த 20 ஆண்டுகளாக செய்தி - மக்கள் தொடா்புத் துறையில் விபத்தின்றி வாகனத்தை இயக்கிய ஓட்டுநா் பஞ்சாபிகேசனுக்கு 4 கிராம் தங்கப்பதக்கத்தை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தாா். அப்போது, ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி, ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், நகராட்சி ஆணையா் சித்ரா சோனியா, செய்த மக்கள் தொடா்பு அலுவலா் போ.சுருளிபிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT