அரியலூர்

பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

30th Jun 2022 11:17 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள தெற்கு ஆயுதகளம், நடுத்தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி வினோதா (26). இவருக்கும், கீழத்தெருவைச் சோ்ந்த வீரமணி மகன் பாலாஜி (26) என்பவருக்கும் இடையே நிலப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்து வினோதாவையும், அவரது மாமியாா் சந்திராவையும் , பாலாஜி மற்றும் அவரது உறுவினா்கள் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். இதுகுறித்து அளித்த புகாரின்பேரில், ஜயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து பாலாஜியை போலீசாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT