அரியலூர்

ஆலைக்கு நிலம் வழங்கியவிவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணா சிலை அருகே அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் சிமென்ட் ஆலை நிா்வாகம் அளித்த வாக்குறுதிகளான வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால், நிலத்துக்கான இழப்பீடு தொகை அல்லது நிலத்தை திரும்பித் தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு, நிலம் வழங்கிய விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ஜி.கலைவாணன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் புதுப்பாளையம் சுமதிபாண்டியன், அஸ்தினாபுரம் நடராஜன் மற்றும் நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், கொட்டாக்காடு, காட்டுப்பிரிங்கியம், கல்லங்குறிச்சி, தாமரைக்குளம், சீனிவாசபுரம் ஆகிய கிராம விவசாயிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT