அரியலூர்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு தொடங்கிய பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் கதிரவன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில் குமாா் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினா் பங்கேற்றனா்.

போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தவிா்க்க வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்திய படி ஊா்வலமாகச் சென்றனா். மேலும் பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களையும் அவா்கள் வழங்கினா். பேரணியானது பிரதான கடைவீதி வழியாகச் சென்று, பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT