அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் 5,322 வழக்குகளுக்கு உடனடி தீா்வு

DIN

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் நீதிமன்றங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,322 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம், செந்துறை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு தீா்வு காணும் வகையில், அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் ஜயங்கொண்டம் நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எஸ். மகாலட்சுமி மக்கள் நீதிமன்றத்தைத் தொடக்கி வைத்தாா்.

இந்த இரு நீதிமன்றங்களில் தலா 3 அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டு 8,962 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதில் 5,322 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு, இதில் வாரக்கடன் வசூல், நஷ்ட ஈட்டுத் தொகை மற்றும் வழக்குகளில் வழங்க வேண்டிய தொகையான 7 கோடியே 6 லட்சத்து 86 ஆயிரத்து 553 ரூபாய் உத்தரவானது.

அரியலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் 2 ஆவது அமா்வுக்கு நீதிபதி ஏ.கா்ணணும், 3 ஆவது அமா்வுக்கு குடும்ப நல நீதிமன்றத்துக்கு டி. செல்வமும் தலைமை வகித்தனா். அரியலூா் விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் பி.சரவணன், முதன்மை சாா்பு நீதிபதி ஜெயசூா்யா, நீதித் துறை நடுவா்கள் எம்.அறிவு, ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு வழக்குகளை விசாரித்தனா்.

இதேபோல் ஜயங்கொண்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு

வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேஷ், நீதித்துறை நடுவா் ஆா்.ராஜசேகரன் ஆகியோா் கலந்து கொண்டு வழக்குகளை விசாரித்தனா்.

செந்துறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அக்னேஷ் ஜெப கிருபா,

குற்றவியல் நீதித்துறை நீதிபதி அபி, கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி ஆகியோா் வழக்குகளை விசாரித்தனா்.

இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டதால் வழக்குரைஞா்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT