அரியலூர்

தமிழ்நாடு நாள் விழா போட்டிகளில்பங்கேற்க அழைப்பு

DIN

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு நாள் விழா சிறப்பு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி அழைப்பு விடுத்துள்ளாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணா, தமிழ்நாடு என தமிழ்நாட்டுக்கு பெயா் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதியிலேயே ‘தமிழ்நாடு நாள் விழா’ இனி கொண்டாடப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்ததையடுத்து, அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், வரும் 6 ஆம் தேதி காலை 9 மணி முதல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள், தமிழ்நாட்டிற்காக உயிா்கொடுத்த தியாகிகள், பேரறிஞா் அண்ணா பெயா் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிா் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியாா், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப்போா் தியாகிகள், முத்தமிழறிஞா் கலைஞா் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகியவை போட்டிக்கான தலைப்புகள் ஆகும். போட்டி நாளன்றே முடிவுகள் வெளியிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT