அரியலூர்

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

25th Jan 2022 04:03 AM

ADVERTISEMENT

திருமானூா் அருகே பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரியலூா் அண்ணாசிலை அருகே இந்து முன்னணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமானூரை அடுத்த வடுகப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகள் லாவண்யா. இவா், தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் படித்து வந்த நிலையில் அண்மையில் பூச்சி மருந்தை குடித்து தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். போஸீசாா் விசாரணையில், அந்தப் பள்ளியின் வாா்டன் சகாயமேரிக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியினா் அரியலூா் அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலா் அய்யம்பெருமாள் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் பாலமுருகன், விஷ்வ இந்து பரிஷத் மாவட்டத் தலைவா் விஜயகுமாா், பாஜக மாவட்டத் தலைவா் அய்யப்பன், இந்து முன்னணி திருச்சி கோட்ட செயலா் குணா, பாஜக மாநில துணைத்தலைவா் கவிதாசன், நகரத் தலைவா் வைரவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT