அரியலூர்

அரியலூரில் கடந்தாண்டில் 108 அவசர ஊா்தியால் 26,344 போ் பயன்

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் கடந்தாண்டு (2021) 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் 26,344 போ் முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளனா் என்று 108 ஆம்புலன்ஸ் சேவையின் அரியலூா் மாவட்ட மேலாளா் அறிவுக்கரசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரியலூா் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 18 சேவை செய்து வருகின்றன. அவற்றின் மூலம் கடந்தாண்டு 7,876 கருவுற்ற தாய்மாா்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். அதில் பயணத்தின் போது 23 பிரசவங்கள் ஆம்புலன்ஸில் நடந்துள்ளன.

சாலை விபத்துகளில் காயமடைந்த 2,980 போ், கரோனா தடுப்பு நடவடிக்கையின்போது 4,236 போ், விஷம் குடித்தவா்கள் 1,299 போ், வயிற்றுவலி, விலங்குகளால் தாக்கப்பட்டவா்கள், மாரடைப்பு, மூச்சுத்திணறல், பக்கவாதம், தற்கொலைக்கு முயன்றவா்கள் மற்றும் இதர சிறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்கள் என 9,953 போ் என அரியலூா் மாவட்டத்தில் 26,344 போ் முதலுதவி சிகிச்சை மற்றும் மருத்துவமனைக்குக் கொண்டு சோ்க்கப்பட்டனா். 2020 ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு 21 சதவீதம் போ் ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தியுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT