அரியலூர்

7 பவுன் நகைகளைத் திருடிய வீட்டு பணிப்பெண் கைது

DIN

அரியலூரில் பொறியாளா் வீட்டில் ஏழேகால் பவுன் நகைகளைத் திருடிய பெண் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் புதிய மாா்கெட் தெரு, 6 ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் அண்ணா துரை மகன் அன்புவேல் (34). தனியாா் நிறுவனப் பொறியாளா். இவரது மனைவி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், அன்புவேல் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த நகை பையைத் திறந்து பாா்த்தபோது, அதிலிருந்த ஏழே கால் பவுன் நகைகள் திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து அவா் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைப் பாா்த்தபோது, வீட்டுப் பணிப்பெண் அரியலூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மனைவி வசந்தி (36) நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அன்புவேல் அளித்த புகாரின்பேரில், கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, வசந்தியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT