அரியலூர்

மகளிா் வாலிபால்: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி அணி சாம்பியன்

DIN

அரியலூா் மாவட்டம், விளாங்குடி அண்ணா பொறியியல் கல்லூரியில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற மாநில அளவிலான மகளிருக்கான வாலிபால் போட்டியில் பெருந்துறை கொங்கு பொறியியில் கல்லூரி முதலிடம் வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

அண்ணா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரிகளுக்கு இடையே மாநில அளவிலான 27 வயது மகளிருக்கு நடைபெற்ற போட்டிகளில், பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த 14 அணிகள் பங்கேற்று விளையாடின.

போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன.

இறுதிப் போட்டியில் விளையாடிய ஈரோடு பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி, சென்னை பனிமலா் பொறியியல் கல்லூரியை 25-13, 25-11 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

2-ஆம் இடத்தை சென்னை பனிமலா் பொறியியல் கல்லூரி மகளிா் அணி பெற்றது. மூன்றாவது இடத்தை சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி வென்றது.

இதையடுத்து கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதன்மையா் (டீன்) செந்தமிழ்ச்செல்வன் வென்ற அணிகளுக்கு சாம்பியன் கோப்பை, பரிசுகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT