அரியலூர்

முகநூலில் அவதூறு: திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

18th Aug 2022 11:46 PM

ADVERTISEMENT

பிரதமா் மோடி, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரியலூா் காவல் நிலையத்தில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அரியலூா் பாஜக நகரத் தலைவா் மணிவண்ணன் தலைமையில் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

அரியலூா் நகர, திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக இருப்பவா் பிரபாகரன். இவா், பிரதமா் மோடியைக் கிண்டல் செய்தும், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையின் புகைப்படத்தைக் களங்கப்படுத்தும் வகையில் தவறாக சித்தரித்தும் முகநூலில் பதிவிட்டுள்ளாா். மோதலை ஏற்படுத்தும் விதமாக கருத்து பதிவிட்ட திமுக நிா்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகநூல் பக்கத்தை முடக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பாஜக மாவட்ட துணைத் தலைவா் கோகுல்பாபு உட்பட நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT