அரியலூர்

புதை உயிரிப்படிவ அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு

DIN

அரியலூா் மாவட்டம், வாரணவாசியிலுள்ள புதை உயிரிப் படிவ அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், 50 நிழல்தரும் மற்றும் பழமரக்கன்றுகள் நடப்பட்டன. இதை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.மகாலட்சுமி, மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி ஆகியோா் நட்டு வைத்தனா்.

நிகழ்வில் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி கா்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஆனந்தன், அருங்காட்சியக் காப்பாளா் சிவக்குமாா், வாரணவாசி ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயராஜ் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT