அரியலூர்

குடிநீா் கேட்டு மக்கள் மறியல்

17th Aug 2022 11:30 PM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், கடுகூரில் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடுகூா், இந்திரா நகரில் உள்ள பொதுக்குழாயில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டதால் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புகாா் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா், சம்மந்தப்பட்ட அலுவலா்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்துசென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT