அரியலூர்

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு

17th Aug 2022 11:32 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள (நில ஆய்வாளா், வரைவாளா் மற்றும் உதவி வரைவாளா்) தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு ஆக. 24 முதல் அரியலூரில் தொடங்கவுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும். தொடா்ந்து, மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும். பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் புகைப்படம், ஆதாா் அட்டை நகல் மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை வியாழக்கிழமை (ஆக. 18) முதல் நேரில் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT