அரியலூர்

மணகெதி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள மணகெதி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவது, கிராம மக்களுக்கு 100 சதவீதம் குடிநீா் வழங்குவது, அனைவரையும் கழிவறையை பயன்படுத்த வைப்பது, கழிவுநீா் செல்ல வடிகால் வசதிகள் ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, துணைத் தலைவா் வ.லட்சுமணன் முன்னிலை வகித்தாா், மக்கள் நலப் பணியாளா் கவிதா மற்றும் வாா்டு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா், இளைஞா் மன்ற உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டு தீா்மானத்துக்கு ஆதரவு அளித்து கையெழுத்திட்டனா். முன்னதாக ஊராட்சிச் செயலா் செந்தில்குமாா் வரவேற்று அறிக்கை வாசித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT