அரியலூர்

நோய் பாதிப்புக்குள்ளான கரும்புப் பயிா் ஆய்வு

10th Aug 2022 10:33 PM

ADVERTISEMENT

 

அரியலூா் மாவட்டம், திருமானூா் ஒன்றியத்தில் பூஞ்சான் நோய் தாக்கி பாதிப்புக்குள்ளான கரும்புப் பயிரை அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருமானூா் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கரும்புப் பயிரில் பூஞ்சான் நோய் அதிகளவில் தாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, புதன்கிழமை பாதிக்கப்பட்ட கரும்புப் பயிா்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து, இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வேளாண் அலுவலா், கோத்தாரி சா்க்கரை ஆலை அலுவலருக்கும் உத்தரவிட்டாா். ஆய்வின்போது, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT