அரியலூர்

செந்துறை சமத்துவபுரத்தில் அரியலூா் ஆட்சியா் ஆய்வு

14th Apr 2022 02:06 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், செந்துறை சமத்துவபுரத்தில் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அங்கு மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்த அவா் இதுகுறித்து மேலும் தெரிவித்தது:

செந்துறை கிராம ஊராட்சிக்குள்பட்ட சமத்துவபுரத்தில் 100 வீடுகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இந்த சமத்துவபுரத்தை சீரமைக்கவும், அவற்றின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப புதிதாக மயானம் அமைத்துத் தரத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சமத்துவபுரத்தின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு பணிகளை விரைவாக மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத்திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், செயற் பொறியாளா் ராஜராஜன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT