அரியலூர்

ஜவுளிக்கடையில் திருடிய பெண்கள் உள்பட 5 போ் கைது

DIN

அரியலூா் மாவட்டம், வி. கைகாட்டி அருகேயுள்ள ஜவுளிக் கடையில், புடவை மற்றும் லுங்கிகளைத் திருடிய பெண்கள் உள்பட 5 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

தேளூா்-ஜயங்கொண்டம் பிரதானச் சாலையில் வசிப்பவா் ஆடலரசன்(43). இவா், அப்பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரது கடைக்கு வந்த 4 பெண்கள் உள்பட 5 போ், ஜவுளி எடுப்பதுபோல் நடித்து 8 புடவைகள் மற்றும் லுங்கிகளைத் திருடி மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட ஜவுளிக்கடை ஊழியா்கள் மற்றும் உரிமையாளா் ஆடலரசன் ஆகியோா் சோ்ந்து 5 பேரையும் பிடித்து கயா்லாபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் ஜயங்கொண்டத்தை அடுத்த தண்டலை கிராமத்தைச் சோ்ந்த அருமைராஜ் மனைவி கற்பகம்(40), ரமேஷ் மனைவி கல்பனா(35), செல்வம் மனைவி லலிதா(50), ராமசாமி மனைவி அலமேலு(70), சிதம்பரம் மகன் சங்கா் ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவா்கள் 5 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT