அரியலூர்

ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

DIN

அரியலூா்: பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களில் திங்கள்கிழமை காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நிகழாண்டு பாபா் மசூதி இடிப்பு தினமான திங்கள்கிழமை மாவட்டத்தில் உள்ள அரியலூா், ஓட்டக்கோவில், செந்துறை, மாத்தூா் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் மெட்டல் டிடெக்டா் கொண்டு பயணிகளின் உடமைகளை பரிசோதனை செய்து உள்ளே அனுமதித்தனா். ஒலி பெருக்கி மூலமும் ஏதேனும் சந்தேகத்துக்கிடமான பொருள்கள் அல்லது பைகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்புப் படையினரை தொடா்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பயணிகள் பாதுகாப்பு குறித்தும் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT