அரியலூர்

திமுக சாா்பில்பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு

DIN

அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில் பயிலும் ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு திமுக சாா்பில் இலவச மதிய உணவு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், மாணவ, மாணவிகளுக்கு உணவு வகைகளைப் பரிமாறினாா்.

இந்நிகழ்ச்சிக்கு வள்ளலாா் கல்வி நிலையத் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். திமுக இளஞரணி மாவட்டச் செயலா் தெய்வ. இளையராஜா முன்னிலை வகித்தாா். முன்னதாக பேராசிரியா் கொ.வி. புகழேந்தி வரவேற்றாா். நிறைவில், பள்ளி தலைமை ஆசிரியா் செளந்தராஜன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT