அரியலூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம்

DIN

அரியலூரில் போக்குவரத்துத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாரத்தான் மற்றும் இரு சக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடக்கி வைத்தாா்.

இந்த மாரத்தான் ஓட்டமானது ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி, அரியலூா் - ஜயங்கொண்டம் சாலை, செந்துறை பிரதானச் சாலை வழியாகச் சென்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. மாரத்தான் ஓட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு. சின்னப்பா, ஜயங்கொண்டம் க.

கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ. சந்திரசேகா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ப.பிரபாகா் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ,

மாணவிகள் அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT