அரியலூர்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

3rd Dec 2021 12:37 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷம் வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமழபாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீா், பஞ்சாமிா்தம், பால் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நந்தியென்பெருமானை வழிபட்டனா்.

இதேபோல், அரியலூா் ஆலந்துரையாா், குறிஞ்சேரி காசி விஸ்வநாதா், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா், கீழப்பழுவூா் அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையாா், பெரியமறை வேதநாயகி உடனாய வேதபுரீஸ்வரா், காமரசவல்லி பாலாம்பிகை உடனாய காா்கோடேஸ்வரா், திருமானூா் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதா், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதா்,செந்துறை பெரியநாயகி உடனாய சிவதாண்டேஸ்வரா் போன்ற சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT

இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags : அரியலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT