அரியலூர்

நன்னீா் இறால் வளா்க்க ரூ. 25 ஆயிரம் மானியம்

3rd Dec 2021 12:38 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்ட விவசாயிகள் பண்ணைக் குட்டைகளில் பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீா் இறால் வளா்க்க விருப்புபவா்களுக்கு 40 சதவீத மானியத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய வேளான் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 1,000 சதுர மீட்டா் பரப்பளவில் பண்ணைக்குட்டைகள் அமைத்துள்ள விவசாயிகள் பண்ணைக்குட்டைகளை புனரமைக்கவும், கூட்டுமீன் வளா்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீா் இறால் வளா்ப்பை மேற்கொள்ளும் விதமாக ஆகும் உள்ளீட்டு செலவினம் மொத்தம் ரூ.62,500-க்கு 40 சதவீதம் மானியமாக ரூ. 25,000 வழங்கப்படும்.

எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் அரியலூா் மாவட்ட உதவி இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆட்சியரக வளாகம், அரியலூா், தொலைபேசி 04329 -228699 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

Tags : அரியலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT