அரியலூர்

ஜயங்கொண்டத்தில் பால் உற்பத்தியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆவின் நிா்வாகத்தில் நிகழும் ஊழலைத் தடுக்க வேண்டும். கரோனா காலத்தில் பால் உற்பத்தியாளா்களின் கால்நடைகளுக்கு 50 சதவிகித மானியத்தில் தீவனம் வழங்கிட வேண்டும்.

பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு ரூ.5 கூடுதலாக வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளா்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையை நிவாரணமாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க ஒன்றியத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா்.மணிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் மகாராஜன், மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.பத்மாவதி உட்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT